உங்கள் கனவில் அடிக்கடி பாம்பு வருகிறதா? அர்த்தம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
கனவில் பாம்பு வருவது குறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பாம்பு வருகிறதா?
நம்முடைய உறக்கத்தில் வரும் ஒவ்வொரு கனவுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும். இதற்கு நல்ல பலன்களையோ அல்லது கெட்ட பலன்களையோ நடக்கவிருப்பதை முன்பே தெரிவிப்பதற்கான எச்சரிகையாகக் கூட இருக்கலாம். அதிலும் அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என நம்பப்படுகிறது.
அப்படி அடிக்கடி கனவில் பாம்பு வருவதால் ஜோதிடத்தின் பலன் என்ன கூறுகிறது பொதுவாகக் கனவில் பாம்பு வந்தால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைக் குறிக்கும். நமது படுக்கையில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போலக் கனவு கண்டால் அது உடலுறவுடன் தொடர்புடையது என்று அர்த்தம்.
ஒரு பெண்ணோ ஆணோ விரைவில் உங்கள் வாழ்க்கையில் இணையப் போகிறார்கள் என அர்த்தம். மேலும் பாம்பு நம்மைக் கடிப்பது போலக் கனவு கண்டால், அது நமக்கு வரும் ஆபத்துக்கான அறிகுறி.
அர்த்தம்
காலில் பாம்பு ஏறுவது போலவும் , தூங்கிக் கொண்டிருக்கும் போது மேலே ஏறிச் செல்வது போலக் கனவு கண்டால் நிறையப் பணம், அந்தஸ்து கிடைக்கும் என அர்த்தம். குறிப்பாக வெள்ளை மற்றும் பாம்பைக் கருப்பு பாம்பைக் கனவில் கண்டால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.அதாவது செல்வச்செழிப்பை அடையபோகிர்கள் என்று அர்த்தம்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.