பைக்கில் நைசாக ஏறி பதுங்கிய நல்ல பாம்பு.... நூலிழையில் உயிர் தப்பிய நபர் - அதிர்ச்சி சம்பவம்
வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
பைக்கில் புகுந்த நல்ல பாம்பு
தன்னுடைய உணவக கடைக்கு எதிரே பைக்கை நிறுத்தி வைத்து தன்னுடைய கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த நல்ல பாம்பு பைக்கில் மெதுவாக ஏறியுள்ளது. நல்லவேளையாக சீனிவாசன் பாம்பு ஏறியதை பார்த்துள்ளார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், வந்தவாசி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மிக நீண்ட நல்ல பாம்பை பைக்கிலிருந்து வெளியே எடுத்தனர்.
பின்னர், பிடித்த அந்த நல்ல பாம்பை அருகில் உள்ள காட்டில் தீயணைப்புத்துறையினர் விட்டனர். சீனிவாசன் பாம்பை பைக்கில் ஏறியதை பார்க்கவில்லையென்றால், அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பும், சலசலப்பும் நிலவியது.