பைக்கில் புகுந்த விஷப்பாம்பு - போராடி பிடித்த தீயணைப்புத்துறையினர் - விழுப்புரத்தில் பரபரப்பு
By Nandhini
விழுப்புரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது.
இது குறித்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பைக்கை கழற்றிவிட்டு லாவகமாக பாம்பை பிடித்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் தீயணைப்புத்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.