‘கீரியுடன் சண்டையிட்டு வலையில் சிக்கிக்கொண்ட பாம்பு’ - பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்ட வனத்துறையினர்

snakefight snakemangoose injuredsnake rescue operation
By Swetha Subash Apr 08, 2022 10:26 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையத்தின் பின்புறம் சாரைப்பாம்பை, கீரி ஒன்று துரத்தி வந்தது. இதனால் அந்த பாம்பு அங்கிருந்த வலையில் மாட்டிக்கொண்டது.

ஏதோ சத்தம் வருவதை கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது பாம்பும், கீரியும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கிருந்த மக்கள் கீரியை துரத்தி விட்டனர். அதன் பன்னர் அந்த பாம்பால் அந்த வலையில் இருந்து வெளிவே வர முடியாமல் இருந்த்தால் பொதுமக்கள் சிங்காநல்லூரை சேர்ந்த பாம்பு பிடி வீரரும், வக்கீலுமான சித்திரன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

‘கீரியுடன் சண்டையிட்டு வலையில் சிக்கிக்கொண்ட பாம்பு’ - பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்ட வனத்துறையினர் | Snake Stuck In A Web After Fight Rescued Safely

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் வலையை அறுத்து அதில் மாட்டிக் கொண்டிருந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினடம் ஓப்படைத்தார். வனத்துறையினர் பாம்பை சோதனை செய்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதுகுறித்து சித்திரன் கூறும்போது, “நான் வக்கீலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் பாம்புகள் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். மேலும் பாம்புகளை மீட்பது எப்படி என்பதை கற்று கொண்டேன்.

பொதுமக்கள் வீடுகளில் பாம்பு புகுந்தால் எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். நான் உடனே அங்கு சென்று பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பேன். கடந்த ஒரு வருடமாக 300 பாம்புகளை பிடித்துள்ளேன்” என்றார்.

சிங்காநல்லூரில் பாம்பை, கீரியிடம் இருந்து பொதுமக்கள் மீட்ட சம்பவம் சமூக ஆர்வளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.