சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண்

Madhya Pradesh
By Fathima Jun 08, 2026 04:50 AM GMT
Report

இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா மாவட்டத்தை சேர்ந்தவர் வச்சல பாய் துர்வே, கர்ப்பமாக இருக்கிறார்.

அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ததுடன் சத்துணவு வாங்க சென்றுள்ளார்.

சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் | Snake In Sathumavu

வீட்டிற்கு வந்த சத்துணவை பிரித்து பார்த்த போது அதில் குட்டி பாம்பு கிடந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வச்சல பாய், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இத்தகவல் காட்டுத்தீ போல் பரவ, உணவின் தரம் குறித்து கிராம மக்கள் கவலை தெரிவித்ததுடன் இதற்கு காரணமாக நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.