காரில் புகுந்த விஷ பாம்பு - உயிர் தப்பிய அதிமுக எம்.எல்.ஏ
மழைவெள்ள பதிப்பை ஆய்வு செய்ய வந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் காரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதனால் திண்டிவனத்தில் பல்வே று இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
குறிப்பாக திண்டிவனம் மற்றும் அதை சுற்றுப்புற பகுதிகளில் தமிழகத்தில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை பதிவாகி திண்டிவனம் மக்களை முடக்கியுள்ளது.
இதையொட்டி திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் திண்டிவனம்,கிடங்கல் 1 பெலா குப்பம்,காவேரிபாக்கம், கிடங்கள் ஏரிக்கரை, வகாப் நகர் இந்திரா நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் உள்ள வகாப் நகர் நகரில் இடுப்பளவு தண்ணீரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்பெரழுது அவரது கார் ரோட்டு ஓரமாக நின்று இருந்தது.அப்பொழுது விஷப்பாம்பு ஒன்று திண்ணீர் நீந்திக் கொண்டு அவரது காரில் சக்கரத்தில் ஏறியது இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர்.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 அடிக்கு மேல் உள்ள அந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து வனத்தில் விட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.