ஏடிஎம்மில் புகுந்த பாம்பு - பணம் எடுக்க சென்ற இளைஞர் தெறித்து ஓடிய பரிதாபம்

Kerala Snakeintheatm
By Petchi Avudaiappan Jan 20, 2022 08:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த செயல் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூர் அருகே அமைந்துள்ள கைபமங்கலம் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு இளைஞர் ஒருவர் பணம் எடுக்க இந்த மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் பி்ன்புறம் ஏதோ ஓடுவது போன்ற  சத்தம் கேட்டுள்ளது.

இதனால் என்ன அது என்கிற ஆர்வத்தில் இயந்திரத்தின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு 4 அடி நீள நாகபாம்பு  பதுங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இதனை தொடர்ந்து இரவு நேரத்தில் இளைஞரி்ன் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் ஏடிஎம் மையத்துக்கு புகுந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களின் பிடியில் நாகபாம்பு சிக்காமல் போக்குக்காட்டியது. இதையடுத்து கையமங்கலம் போலீசாருக்கும், வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த இடத்துக்கு வந்த வனத்துறையினர். ஏடிஎம்மில் பதுங்கிய நாகபாம்பை சில நிமிடத்தில் லாவகமாக பிடித்தனர்.

பிடித்த பாம்பை அருகிலிருக்குமம் வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். ஏடிஎம்மில் மையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.