குடிநீர் குழாயில் உயிருடன் வந்த சாரைப் பாம்பு: ஓட்டமெடுத்த மக்கள்
திருப்பூரில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது உயிருடன் சாரைப்பாம்பு வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது மரவபாளையம். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை தொட்டியிலிருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, உயிருடன் சாரைப் பாம்வு வந்துள்ளது. சிறிது நேரத்தில் தவளையின் உடல்பாகங்கள் வந்துள்ளன, இதைப்பார்த்த பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவளையின் உடல் பாகங்கள் வந்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் தொட்டியை பராமரிக்காமல் இருப்பதும், பாதுகாப்பாக இல்லாததுமே முக்கிய காரணம் எனவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.