பாம்பு பிடிக்க லைசென்ஸ் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் பாம்புகள் பிடிக்கும் தொழில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கி அரசாணையை வெளியிட்டது.
2021 - 2022-ம் ஆண்டில் மொத்தம் 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்கவும்,விஷத்தை விற்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஷ முறிவு மருந்து தயாரிக்க நல்ல பாம்பு,கட்டுவிரியன்,கண்ணாடி விரியன் உள்ளிட்ட வகை பாம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கண்ணாடி விரியன் பாம்பு விஷம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகப்பாம்பு விஷம் ரூ.22 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.