துணையை கொன்றவரை பழிவாங்க காத்திருக்கும் பாம்பு - 7 முறை கடித்ததால் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் வாழும் ஒருவரை பாம்பு ஒன்று 7 முறை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பாம்புகள் தீங்கிழைப்பவர்களை பழிவாங்க நினைக்கும் என்ற கருத்து சினிமாவில் மூலம் வெளிப்பட்டு பொதுமக்களால் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக படங்களும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அப்படியான ஒரு உண்மை சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்ற பப்லு என்ற நபர் விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்ததை பார்த்துள்ளார். அதனை பிரிக்க நினைத்து அருகில் இருந்த குச்சியை எடுத்து தாக்கியதில் ஆண் பாம்பு உயிரிழந்தது.
பெண் பாம்பு அங்கிருந்து தப்பித்து விட்டது. இதன்பிறகு இதுவரை பப்லுவை பாம்பு 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் பிழைத்துள்ளார். மீண்டும் அவரை பாம்பு தீண்டுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், 4 குழந்தைகள் உள்ள தான் எப்போதும் பயத்துடனேயே வாழ்வதாக பப்லு கூறியுள்ளார்.