சல்மான்கானைத் தொடர்ந்து பாம்புக்கடி வாங்கிய பாடகி மேத்தா – அதிர்ச்சி வீடியோ வைரல்
பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவரைத் தொடர்ந்து கேபாப் பாடகியான மேத்தாவும் பாம்புக்கடி வாங்கி இருக்கிறார்.
தற்போது அவர் பாம்பு கடி வாங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடகி மேத்தா அவரது கேபாப் பாடல்களின் மூலமாக பல ரசிகர்களின் மனதை கவந்தவர்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் அவர் பாம்பு கடி வாங்கும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வீடியோவில், அவர் தரையில் படுத்து கொண்டு பாடல் பாடி கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்குள்ள ஒருவர் அவரின் மீது இரண்டு பாம்புகளை ஊற செய்கிறார். அப்போது அதில் ஒரு பாம்பு அவரது தாடையை நன்றாக கடித்து விட்டது. இவர் பிடிஎஸ் பாடல்களை லைவ் ஆக பாடி கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவரது இந்த வீடியோவை பலர் இவரை திட்டி தீர்த்தனர். ஆபத்து அறியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு, இதுபோல் இனி இப்படி நடக்காது என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ அனைத்து சமூக பக்கங்களிலும் பரவி கதிகலங்க வைத்துள்ளது.