அமைச்சர் நேருவின் கூட்டத்தில் பாம்பு புகுந்தது : இந்த வீடியோவும் வைரலாகுது
அமைச்சர் கே. என். நேருவின் கூட்டத்தில் பாம்பு புகுந்தது. காலாலேயே அதைத் தொண்டர் ஒருவர் மிதித்து கொன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் கலந்துகொண்ட விழா
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்கிற பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. 349.98 கோடி ரூபாய் செலவில் பேருந்து முனையம் அமைய விருக்கின்ற நிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார்.
வைரலாகும் வீடியோ
அமைச்சரின் கூட்டத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு பலரும் பதறி அடித்து ஓடினர். ஒரு தொண்டர் மட்டும் பதற்றம் அடையாமல் அந்த பாம்பை தனது காலாலேயே மிதித்து கொன்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.