மதுபாட்டிலில் கிடந்த செத்த பாம்பு..அதிர்ந்துபோன மது பிரியர்

snake shock dead alcohol drinks
By Praveen Apr 15, 2021 10:02 PM GMT
Report

அரியலூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் உயிரிழந்த பாம்புகுட்டி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் (36). விவசாயி. இவர் புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் சுத்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார்.

பின்னர், பாட்டிலை திறந்து சிறிதளவு குடித்த சுரேஷ், மீண்டும் குடிப்பதற்காக டம்பளரில் மதுவை ஊற்ற முயன்றார். அப்போது, பாட்டிலின் உள்ளே இறந்த நிலையில் பாம்பு குட்டி ஒன்று கிடந்ததை கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து, அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.