மணல் கடத்தலை தடுத்த ஆய்வாளரின் கழுத்தை கடித்த கும்பல் - கொடூர தாக்குதல்!

Tamil nadu Crime
By Vinothini May 29, 2023 09:14 AM GMT
Report

 சட்ட விரோதமாக மணலை கடத்தி கொண்டிருந்தவர்களை தடுத்த வருவாய் ஆய்வாளரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மணல் கடத்தல்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் மணல் கொள்ளை நடந்தது.

smugglers-attacked-revenue-inspector

அங்கு அதே ஊரைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு, சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்திச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனால் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் அங்கு சென்று, மண்ணை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைனின் சாவியை பறித்து கடத்தலை தடுத்துள்ளார்.

தாக்குதல்

இந்நிலையில், ஆத்திரமடைந்த அந்த கடத்தல்காரர்கள் சேர்ந்து, இவரை அடுத்து உதைத்துள்ளனர். மேலும் அவரின் தலையில் அடித்தும், கழுத்தில் கடித்து வைத்துள்ளனர்.

smugglers-attacked-revenue-inspector

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆட்சியர் மா.பிரதீப்குமார் துறையூர் சென்று பிரபாகரனைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன்(48), அவரது ஆதரவாளரான அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தனபால்(48), மாணிக்கபுரத்தைச் சேர்ந்த ரா.மணிகண்டன்(26), கீழகுன்னுபட்டியைச் சேர்ந்த க.கந்தசாமி(35) ஆகியோரை கைது செய்தனர்.