இன்று நடைபெற இருந்த ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு - என்ன காரணம்?
இன்று நடைபெற இருந்த ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ம்ரிதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்ம்ரிதி மந்தனா. இவரும், பாலிவுட்டின் இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

சமீபத்தில் உலகக்கோப்பை நடைபெற்ற டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவிற்கு காதலர் பலாஷ் முச்சல் புரோபோஷ் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனிடையே இவர்களுக்கு இன்று(23.11.2025) திருமணம் நடைபெற இருந்தது.
தந்தைக்கு மாரடைப்பு
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.