ஸ்மிருதி மந்தனாவை வருங்கால கணவர் ஏமாற்றினாரா? இன்ஸ்டாவில் பதிவுகள் நீக்கம்!
ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாவில் திருமண பதிவுகளை நீக்கியது கவனம் பெற்றுள்ளது.
ஸ்மிருதி மந்தனா
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் திடீரென நின்று போனது. ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
திருமண நிறுத்தம்?
இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையில், திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது. அதில், பலாஷ் அப்பெண்ணை தன்னுடன் நீச்சல் குளம், ஸ்பா மற்றும் ஜுகு கடற்கரைக்கு வரும்படி கேட்கிறார். மேலும் பலாஷும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் எது உண்மை என்பது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.