ஸ்மிருதி இரானியோடு நடனமாடிய வானதி சீனிவாசன்: களைகட்டும் தேர்தல் களம்

dance bjp srinivasan Smriti Irani vanathi
By Jon Mar 27, 2021 11:30 AM GMT
Report

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் களம் காணுகிறார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனால் கோவையில் இரு கட்சிகளிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.ம.நீ.ம கட்சியினை தோற்கடிக்க துடிக்கும் வானதி சீனிவாசன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக பேட்மிட்டன் ஆடுவது, செல்பி எடுப்பது, மாட்டு வண்டியில் செல்வது என மக்களுடன் சகஜமாக பழகி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். அதோடு மக்களின் கவனத்தை ஈர்க்க பாஜக நட்சித்திர வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறார். அண்மையில் வானதியை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த வகையில் இன்று காலை கோவை தெற்கு தொகுதிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகளிருடன் இணைந்து ஸ்கூட்டியில் பேரணியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த ஒரு அரங்கில் ஸ்மிருதி இரானி கோலாட்டம் ஆடினார். வானதி சீனிவாசனும் அவருடன் இணைந்து ஆடினார்.