விமானத்திலிருந்து கிளம்பிய புகை - அலறிய பயணிகள்…திக் திக் நிமிடங்கள்

Fire
By Thahir Sep 14, 2022 11:59 AM GMT
Report

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில திடீரென வெளியான புகையால் பயணிகள் அலறி அடித்து கதறினர்.

விமானத்தில் கிளம்பிய புகை 

மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 141 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் IX 442 ரக ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராகியுள்ளது.

விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்த போது என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்து விமானத்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.

விமானத்திலிருந்து கிளம்பிய புகை - அலறிய பயணிகள்…திக் திக் நிமிடங்கள் | Smoke From The Plane Screaming Passengers

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பயணிகள் மாற்று விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.