என்ன வேகம் ஸ்மித் வேகத்தில் இரண்டாக உடைந்த கிறிஸ் கெயிலின் பேட் - வைரலாகும் வீடியோ

smith bat gayle
By Irumporai Sep 15, 2021 01:21 PM GMT
Report

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் ஓடியன் ஸ்மித் வேகத்தில் கிறிஸ் கெய்லின் கிரிக்கெட் பேட் இரண்டாக உடைந்து கைப்பிடி, மட்டை என இரண்டாக உடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் மற்றும் அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில் கிறிஸ் கெயில் செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார் அந்த அணிக்கு டுவைன் பிராவோ கேப்டனாக உள்ளார். இந்த நிலையில் 4வது ஓவரில் ஓடியன் ஸ்மித் ஒரு பந்தை வேகமாக வீச அதனை கெய்ல் அடித்த போது அவரது மட்டை ஹேண்டில் தனியாக மட்டை தனியாக இரண்டாக உடைந்தது.

 கெய்ல் வெறும் பேட் ஹேண்டிலுடன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த காட்சி தான் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.