பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை - உத்தரவால் வெடித்த சர்ச்சை

Rajasthan Mobile Phones
By Sumathi Dec 24, 2025 09:30 AM GMT
Report

பெண்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட் போன்கள்

ராஜஸ்தான், ஜலோர் மாவட்டத்தின் 15 கிராமங்களை கொண்ட சுதாமாதா பட்டி என்ற பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை - உத்தரவால் வெடித்த சர்ச்சை | Smartphone Ban For Women Rajasthan

அதன்படி, பெண்கள் பொது இடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பெண்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து முடிவு

பட்டன் போன் எனப்படும் KEYPAD உள்ள செல்போன்களை வீட்டுக்குள் மட்டும் பெண்கள் பயன்படுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் செல்போன் வைத்திருப்பதால் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும்,

நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இதனால் குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் அவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி

மாணவிகள் கல்வி ரீதியாக தேவைப்பாட்டால் வீட்டிற்குள் மட்டும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 26ஆம் தேதி முதல் 15 கிராமங்களில் அமலுக்கு வரவுள்ளது.