ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணையவசதிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் 44 சதவீத பேரிடமும், நகரப்புறங்களில் 65 சதவீத பேரிடம் மட்டுமே இனையதள வசதிகள் உள்ளது.
இதனால் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பாடங்களை கற்க முடியவில்லை. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பெரும்பாலான பெற்றோர்களால் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி தர இயலமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் கிடைத்த உடன், மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ஸ்மார்ட் போன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது