ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் நிர்மல்குமார்

Tamil nadu CTR Nirmal Kumar
By Vinoja Oct 19, 2026 11:27 AM GMT
Report

சென்னையில் மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், வெளியில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டர் சில விளக்கங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளதால், இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் நிர்மல்குமார் | Smart Meter Tender Postponed By Two Months

1,000 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 25 ஆண்டுகள் பழமையான 600 மின்மாற்றிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,000 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்கெனவே 2,600 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2,400 பேரை ஒரு வாரத்திற்குள் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இனி ஒப்பந்தப் பணியாளர்கள் டெண்டர் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்மாற்றிகள் கொள்முதல், முந்தைய ஆட்சியில் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட அனுமதிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.