ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 - இறுதிச் சுற்று தொடங்கியது

Tamil nadu Chennai
By Thahir Aug 27, 2022 05:23 AM GMT
Report

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 பி.எஸ் அப்துர் ரஹ்மான் கல்வி நிறுவனத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் திட்டம்

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் மாணவர்களுக்கு உதவும் வகையில், மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், இத்திட்டத்தின் மூலம் புதிய தயாரிப்புகளை கண்டுபிடிப்பதற்கான முறைகளை கற்றுக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022-ல் 6 முதல் 9 வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

இறுதிச்சுற்று தொடங்கியது

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 என்ற திட்டம் பி.எஸ் அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 - இறுதிச் சுற்று தொடங்கியது | Smart India Hackathon 2022 Final Round Begins

இதன் தொடக்க விழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியை பி.எஸ் அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கிரசன்ட் இனோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சிலும் (CIIC) தொகுத்து வழங்குகிறது.

இதன் தொடக்க விழாவில் மகேந்திரா அன்ட் மகேந்திரா குரூப்பின் துணை பெருந்தலைவர் வேணுகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 - இறுதிச் சுற்று தொடங்கியது | Smart India Hackathon 2022 Final Round Begins

இத்திட்டத்தின் நிகழ்ச்சியில் 20 குழு கொண்ட 160 மாணவர்களும், 15க்கும் மேற்பட்ட அறிவுரையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு தொழிற்சாலை தேவைகளுக்கு தீர்வு காணும் மாணவ குழுவிற்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க விழாவை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் நிறுவனத்தின் வேந்தர் ஆரிப் புஹாரி, மற்றும் துணை வேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.