33 பேர் மட்டுமே வசிக்கும் நாடு - உலக வரைபடத்திலேயே இல்லாத அதிசயம்!
உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு ஒன்றிற்கு ஜனாதிபதி இருக்கிறார்.
மொலோசியா
அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்துள்ளது மொலோசியா. இந்த சிறிய நாடு வெறும் 33 மக்களை மட்டுமே கொண்டுள்ளது.
இது தனக்கென சொந்த கொடி, நாணயம், மரபுகள் மற்றும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் ஒரு ஜனாதிபதியையும் கொண்டுள்ளது. 1977ல் கெவின் பாக் என்ற நபரும் அவரது நண்பரும் சேர்த்து அவர்களது வீட்டை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துள்ளனர்.
சிறிய நாடு
இங்கு சுற்றுலா பயணிகளை வரவேற்கிறார்கள், ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லும் முன் அவர்களின் பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து கொள்ள வேண்டும். கெவின்தான் அங்கு ஜனாதிபதி.
இங்கு கடை, நூலகம், தபால் நிலையம் மற்றும் கல்லறை என அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளது. இந்த நாட்டில் வெங்காயம், வால்ரஸ்கள் மற்றும் கெளுத்தி மீன்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுக்கப்படுகிறது.

முதலில் பார்ப்பது உங்கள் மனதை வெளிச்சம் போட்டு காட்டும்- இந்த Test-ல் நீங்கள் எதை பார்த்தீர்கள்? Manithan

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
