‘‘கடையில் கல் வீச்சு சிறு சம்பவம்’’ : வானதி சீனிவாசன் விளக்கம்

kamal bjp stone vanathi
By Jon Apr 02, 2021 11:56 AM GMT
Report

 கோவையில் கல்வீச்சு சம்பவம் என்பது சிறு சம்பவம் என வானதி சீனிவாசன்கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவையில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்தார்.

இதனை அடுத்து கோவையில் கடைகளை அடைக்கும்படி பாஜக தொண்டர்கள் அராஜகம் செய்தனர் அடைக்காத கடைகள் மீது கல் வீசி எறிந்ததாகவும் இதில் ஒரு செருப்பு கடை மிகுந்த சேதம் அடைந்தது என்றும் கூறப்பட்டது.

 

அந்த கடையை கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய நிலையில் கோவையில் கல்வீச்சு சம்பவம் விளக்கமளித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.

  ‘‘கடையில் கல் வீச்சு சிறு சம்பவம்’’ : வானதி சீனிவாசன் விளக்கம் | Small Stone Shop Vanathi Srinivasan Explanation

கோவையில் பாஜக ஊர்வலத்தின்போது செருப்புக் கடையில் கல் வீசப்பட்டது சிறு சம்பவம் என்றும் அது ஊதிபெரிதாக்க படுவதாக கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.