தொழிலில் ரூ.800 கோடி வருமானம் - நயன்தாரா - சமந்தாவை மிஞ்சிய சின்னத்திரை நடிகை
பல நடிகைகளும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
தொழில்
சினிமாவில் தற்போது நடிகைகளும் கோடிகளில் சம்பாதிக்க துவங்கிவிட்டார்கள். நயன்தாரா - திரிஷா போன்றோர் 10 கோடிக்கு சம்பளம் வாங்கும் நிலையில், பல நடிகைகளும் 2-5 கோடி வரையில் ஒரு படத்திற்கு பெறுகிறார்கள்.
ஆனால், முதல் ஓரிரு படங்களில் வெற்றி பெரும் சிலர், அதன் பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பின்தங்கி விடுகிறார்கள். அப்படி சினிமாவில் இருந்து மறைத்து போன நடிகைகள் ஏராளம்.
ஆனால், தற்போதைய பல நடிகைகள் சம்பாதித்து கொண்டிருக்கும் போதே, வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து தங்களது எதிர்காலத்தை சரியாக அமைத்து கொள்கிறார்கள்.
800 கோடி
அப்படி தான் நடிகைகள் சமந்தா, நயன்தாரா போன்றோர் வெவ்வேறு தொழில்களில் இறங்கியுள்ளார்கள். அப்படி, ஒரு நடிகை தொழிலில் 400 கோடி ரூபாய்க்கு கிட்டத்தட்ட வருமானம் பெற்று திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகியிருக்கின்றார்.
இந்தி டிவி நடிகையான ஆஷ்கா கோரடியா கோப்லே, 2002-ஆம் ஆண்டு "அச்சனக் 37 சால் பாத்" என்ற தொடரில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து எண்ணற்ற தொடர்களில் நடித்துள்ள அவர், நாகினி, நாகினி 2 போன்ற ஹிட் தொடரிலும் நடித்துள்ளார்.
இவர் 2018'இல் Renée Cosmetics என்ற பெயரில் அழகு சாதன நிறுவனம் ஒன்றை நிறுவினார். அந்நிறுவனம் 100 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ. 834 கோடி வெறும் இரண்டே ஆண்டுகளில் எட்டியது.
பிரபல வெற்றிகரமான தொழிமுனைவோராக மாறியுள்ள ஆஷ்கா கோரடியா திரைத்துறையில் இருந்து முழுவதுமாக விலகில்லார் என்றும் கூறப்படுகிறது.