தலைகுப்புற விழுந்த விமானம் - பயங்கரமாக கிளம்பிய தீப்பிழம்பு!
சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது.
விமான விபத்து
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரில் சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஃப்ரீசியா ஆர்.ஜி. மாடல் இலகுரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கரும்புகை சூழ்ந்த நிலையில், சாலை முழுக்க தீப்பற்றி எரிந்தது. விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதுடைய தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ என தெரியவந்துள்ளது.
இருவர் பலி
செர்ஜியோ ரவாக்லியா(75) என்பவர்தான் விமானத்தை இயக்கியுள்ளார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அதற்குள் விமானம் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. தொடர்ந்து விமானப் பாதுகாப்பு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
விமானத்தின் பராமரிப்பு விவரங்கள் மற்றும் இயந்திரத்தின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளன. இதுகுறித்து விமானத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம்.
இதனால் விமானத்தை அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்க செர்ஜியா முயன்றிருப்பார். அப்போது விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து, அது சுழன்று விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.