தடுப்பூசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் தட்டுப்பாடு ஏற்படாது - ஹரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு
ஹரியானாவில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதற்கு அம்மாநில முதல்வர் சொன்ன காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதற்கு தடுப்பூசி மட்டும்தான் தற்போது தீர்வு என்பதால் அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடத்தி வருகின்றன.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் கடிதம் எழுதி வருகின்றன.
இந்நிலையில் ஹரியானா முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தெரிவித்துள்ள கருத்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டெல்லியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுவதால் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் ஹரியானாவில் நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை மட்டுமே தடுப்பூசி போடப்படுவதால் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.