தமிழக அமைச்சரவையில் திடீரென செய்யப்பட்ட 3 மாற்றங்கள் - ஏன் தெரியுமா?
தமிழக அமைச்சரவையில் 3 இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை பெரிய அளவிலான அதிருப்திகள் அரசுக்கு எதிரான ஏற்படவில்லை. அதேசமயம் திமுக இளைஞரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை அமைச்சராக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்தது இருந்து வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பனிடம் இருந்து வந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடமிருந்து அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த துறையை இதுவரை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கவனித்து வந்தார். இனி அமைச்சர் சி. வே. கணேசன் இதை கவனிப்பார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக ரீதியாக மட்டுமே இந்த இலக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் பெரிய மாற்றத்திற்கான சிறிய முன்னோட்டமாக இது இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.