திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 36 வயது நடிகை - அதிர்ச்சியடைந்த திரையுலகம்!
திருமணத்திற்கு முன்பே ஸ்லம் டாக் மில்லினர் படத்தின் கதாநாயகி பிரைடா பிரிண்டோ கர்ப்பமாக இருக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம் டாக் மில்லினர் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் பிரைடா பிரிண்டோ. இதன்பின் ஹாலிவுட் திரையுலகிற்கு சென்ற நடிகை பிரைடா பிரிண்டோ, தற்போது முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

படங்களில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கும் கடந்த 2019ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு திருமணம் செய்வதற்கான நாட்கள் தள்ளி கொண்டே இருந்தது. இதுவரைக்கும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் நடிகை பிரைடா பிரிண்டோ, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.

இந்த தகவல் தற்போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.