பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்லும் நிலவு..ஒரு நாள் 25 மணி நேரமாக மாறிவிடுமா?

World
By Swetha Aug 03, 2024 07:45 AM GMT
Report

பூமியை விட்டு நிலவு விலகி செல்வதால் பல மாற்றங்கள் எற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விலகும் நிலவு..

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதாக அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர்கள் குழு அமைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்லும் நிலவு..ஒரு நாள் 25 மணி நேரமாக மாறிவிடுமா? | Slowly Moon Is Going Far Away From Earth

அதில், நிலவு மெல்ல செல்லும் விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் பூமியில் பல விதமான மாற்றங்கள் எற்படலாம் எனவும், பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வு தெரிவிக்கின்றனர்.

தற்போது, ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியை விட்டு விலகும் சந்திரன் .. வரப்போகும் பெரும் ஆபத்து : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியை விட்டு விலகும் சந்திரன் .. வரப்போகும் பெரும் ஆபத்து : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

 25 மணி நேரம்..

கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு பல கோடி ஆண்டுகள் கழித்தே இப்போது இருப்பது போல் 24 மணி நேரமாக மாறியுள்ளது.

பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்லும் நிலவு..ஒரு நாள் 25 மணி நேரமாக மாறிவிடுமா? | Slowly Moon Is Going Far Away From Earth

இதற்கான காரணம் . பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை தான் எனப்படுகிறது. அதாவது இதன் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும். இது குறித்து விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் பேசுகையில்,

நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.