அவுட் ஆன ரோஹித்..பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிறுவன் செய்த செயல் - கடைசியில் நேர்ந்த கதி!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் கோஷம் எழுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹமீதுல்லா கான் - ஆயிஷா தம்பதியினர். இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார். அதே பகுதியில் ஹமீதுல்லா கான் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அச்சிறுவன் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியினை வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அவுட் ஆகியுள்ளார். இதனால் உற்சாகத்தில் அச்சிறுவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகத் தெரிகிறது.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சச்சின் வரத்கர் என்பவர் சென்ற போது சிறுவனின் கோஷமிட்டபடி ஓடியதைப் பார்த்துக் கோபமடைந்துள்ளார். அதன்பிறகு சிறுவனை பிடித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பலாம் எனக் கூறி கண்டித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவா?
மேலும் சிறுவனை அவரது பெற்றோரிடம் அழைத்துச் சென்று தேசவிரோத கோஷங்களை எழுப்புகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியதால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சச்சின் வரத்கர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஹமீதுல்லா கான் அவரது மனைவி ஆயிஷா மற்றும் 14 வயது மகனைக் கைது செய்தனர். மேலும் அவர் நடத்திவந்த இருப்பு கடையை புல்டோசர் மூலம் கடையை இடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.