நடுவானில் பறந்த விமானத்தில் அசந்து துாங்கிய விமான ஓட்டுநர்கள் - பதறிய பயணிகள்
37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான ஓட்டுநர்கள் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கிய விமானிகள்
நடுவானில் சுமார் 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமான ஓட்டுநர்கள் இருவரும் Auto Pilot Modeல் செட் செய்து விட்டு தூங்கியுள்ளனர்.
விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே விமானத்தின் தானியங்கி அலாரம் ஒலித்துள்ளது. அலாரம் ஒலித்ததால் தூங்கிய இருவர் கண்விழித்து எழுந்துள்ளனர். இதனையடுத்து விமானத்தை தரையிறக்கியுள்ளனர். நல்லவேளையாக எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.
வலுக்கும் கண்டனங்கள்
இவர்கள் இருவரும் தூங்கியதை விமானத்தில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.