கோடையில் இரவு சரியா தூக்கம் வரவில்லையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..
கோடை காலத்தில் நன்றாக தூங்குவது எப்படி என்பது குறித்த டிப்ஸை பார்க்கலாம்..
சுட்டெரிக்கும் வெயில்
கோடை வெயில் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனால், பலரும் இரவு நேரத்தில் சரியாக தூங்குவதில்லை. தூக்கத்திற்கு போராட வேண்டியுள்ளது.
உங்கள் வீட்டில் AC இல்லாவிட்டால் பல மணி நேரங்கள் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டரை ஒரு பாத்திரத்தில் வைத்து ஃபேனுக்கு நேராக அல்லது காற்று படும் இடத்தில் வைப்பது அந்த ரூமை கூலிங்காக்க உதவும்.
நல்ல தூக்கம்
பருத்தி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட லைட்டான, ஹீட்டை குறைக்க கூடிய காற்றோட்டமான படுக்கை அல்லது மெத்தையை பயன்படுத்தலாம். உடல் வெப்பநிலையை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க தூங்க செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு தூங்கலாம்.
மிதமான உணவுகளை சாப்பிட முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது.
தூங்க செல்லும் முன் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டை கணிசமாக குறைத்து கொள்வது உடல்நலத்திற்கும், மன அமைதிக்கும் சிறந்தது.
நிலையான ஒரு தூக்க அட்டவணையை பின்பற்றுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.