பாலியல் வன்முறை புகாரில் கைது - அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட்...!
பாலியல் வன்முறை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, அனைத்து வடிவிலான போட்டியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வீரர் தனுஷ்கா குணதிலகா
இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்த தனுஷ்கா குணதிலகா, டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் தனியாக சந்தித்துக் கொண்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட தனுஷ்கா குணதிலகா
அப்போது அப்பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து அப்பெண் சிட்னி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர்.
இதனைடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை போலீசார் விசாரித்து 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளனர். தற்போது அவர் சுரி ஹில்ஸ் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை -
இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் -
'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தை ஐசிசியுடன் கலந்தாலோசித்து, ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்திருந்தது.
தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட்
இந்நிலையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்டு செய்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் -
தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார். இதனை எந்தவகையிலும் சகித்து கொள்ள முடியாது. விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
The ExCo of SLC decided to suspend national player Danushka Gunathilaka from all forms of cricket with immediate effect and will not consider him for any selections. READ ?https://t.co/0qp6lNVEoH
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 7, 2022