சில்மிஷம் செய்த நடிகர் - முடியை பிடித்து இழுத்து அறைந்த பாகுபலி பட நடிகை!
தன்னிடம் தவறாக நடந்த நடிகரை அறைந்ததாக நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.
நோரா ஃபதேஹி
2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை நோரா ஃபதேஹி. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.
தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு தகவல்
அதில், என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன்.
உடனே பதிலுக்கு என்னை அறைந்தார் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது ரொம்ப மோசமான சண்டையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.