இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இலங்கை அணி

Srilanka India Bcci INDvsSL Icc
By Petchi Avudaiappan Jul 18, 2021 09:45 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

ஷிகர் தவான் தலைமையில், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இலங்கை அணியில் புதிய கேப்டன் ஷனகா தலைமையில் போதிய அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணி வெற்றியோடு தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இலங்கை அணி | Sl Won The Toss Choose To Bat Against India

இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது.