ராஜாவுக்கு ராஜா நான்டா..விராட் கோலிக்கு வெறித்தனமாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்..!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.
பகலிரவு போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அப்போது மைதானத்திற்கு வந்த விராட் கோலிக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (15) மற்றும் மாயன்க் அகர்வால் (4) ஆகியோர் விரைவாக விக்கெடை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த ஹனுமா விஹாரி (31) மற்றும் விராட் கோலியும் (23) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை.
அடுத்தடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் (39) மற்றும் ஜடேஜாவும் (4) விரைவாக விக்கெட்டை இழந்து வெளியேறியதால் போட்டியின் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்துள்ளது.
A special bond with the crowd at the M Chinnaswamy Stadium ?️
— BCCI (@BCCI) March 12, 2022
The King ? in all his glory
Follow the match ▶️ https://t.co/t74OLq7xoO #TeamIndia | #INDvSL | @imVkohli | @Paytm pic.twitter.com/1zXOoimNQe