இந்திய அணியை எங்களால் சமாளிக்க முடியவில்லை - இலங்கை அணி கேப்டன் வேதனை

INDVsSL SLVsIND T20Match SrilankaCaptain captainDasunShanakaSpeech
By Thahir Feb 27, 2022 06:07 PM GMT
Report

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில்,இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்திய அணியை எங்களால் சமாளிக்க முடியவில்லை - இலங்கை அணி கேப்டன் வேதனை | Sl Vs Ind T20 Match Srilanka Captain Speech

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் 146 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்ரேயஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கொடுத்து 16.5 ஓவர்களில் இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

இந்திய அணியை எங்களால் சமாளிக்க முடியவில்லை - இலங்கை அணி கேப்டன் வேதனை | Sl Vs Ind T20 Match Srilanka Captain Speech

இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா இந்திய அணி மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியை எங்களால் சமாளிக்க முடியவில்லை - இலங்கை அணி கேப்டன் வேதனை | Sl Vs Ind T20 Match Srilanka Captain Speech

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ள விரும்பகிறேன் என்ற அவர்,சீனியர் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்த தொடரை எதிர்கொண்டது பெரும் சவாலாக இருந்தது.

பவர்ப்ளே ஓவர்களில் நாங்கள் போதிய ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். தவறுகளை விரைவில் சரி செய்து கொள்வோம்.

சர்வதேச போட்டிகள் மிகுந்த சவாலானது, எனவே தோல்விக்கு காரணங்களை கண்டுபிடிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியை தயார்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்