இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயஸ் ஐயர் - அபார வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில்,இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் 146 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்ரேயஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கொடுத்து 16.5 ஓவர்களில் இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.
இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது