Monday, Apr 7, 2025

சாட்டை எடுக்கும் ரணில் : இலங்கையில் அமலுக்கு வருகிறதா 21-வது சட்டதிருத்தம் ?

Ranil Wickremesinghe
By Irumporai 3 years ago
Report

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் 21 - வது சட்டதிருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.

21 வது சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து  வெளியான அறிக்கையில்:

21-வது சட்ட திருத்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சாட்டை எடுக்கும் ரணில் :   இலங்கையில்  அமலுக்கு வருகிறதா  21-வது சட்டதிருத்தம் ? | Sl Leaders Agree To Pass 21St Amendment Soon

எனவே அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசியலமைப்பின் 21-வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதில் மகிழ்ச்சி" என்று பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 21-வது திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை உருவாகும் .