வானை நிரப்பிய பலுான்கள் - அவதியடைந்த பொதுமக்கள்

People Sky Baloon Power Cut Afected
By Thahir Sep 15, 2021 09:12 AM GMT
Report

பலூனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் டிரெஸ்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பகலுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வானை நிரப்பிய பலுான்கள் - அவதியடைந்த பொதுமக்கள் | Sky Baloon Power Cut

இதனால் அங்கு இருந்த மூன்று லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுமட்டுமின்றி போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து போன்றவையும் பாதிப்படைந்தது.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு 30க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் சென்றுள்ளன.

மேலும் பலர் லிஃப்டுகளில் சிக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 24 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மருத்துவமனைகள் மட்டும் அவசர தேவைக்கான மின்சாரத்தை பயன்படுத்தி பணி புரிந்துள்ளனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து பகுதியிலும் மின்சாரம் வந்துவிட்டது. அதிலும் இரண்டு மணி நேரத்திற்குள் மொத்தமாகவே மின்சார துண்டிப்பானது சரி செய்யப்பட்டது.

இந்த மின்சார துண்டிப்பு காரணமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பலூன் காரணமாக தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது பலூனில் சுற்றப்பட்டிருந்த ஏதோ ஒரு உலோகம் மின்சார பகிர்ந்தளிக்கும் பகுதியில் மோதியுள்ளது. இதனால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இருப்பினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.