குடியரசு தின விழாவில் கொடியேற்றிய ஆளுநர் : புறக்கணித்த முதலமைச்சர் .. பரபரப்பான அரசியல் களம்
தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொடியேற்ற நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.
குடியரசு தினவிழா
நாட்டின் 74 வது குடியரசு தின விழா கோலாகலாமாக கொண்டாடப்படுகின்றது, குடியரசு தின விழாவினை கொண்டாட மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஆளுநரை ஒதுக்கிய முதலமைச்சர்
முக்கியமாக குடியரசுத்தினவிழாவின் போது ஆளுநர்கள் அந்ததந்த மாநிலங்களில் கொடியினை ஏற்றுவார்கள் ,அந்த வகையில் தெலுங்கானாவில் அம்மாநில ஆளுநராக உள்ள தமிழிசைசௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார்.

ஆனால் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த நிகழ்வை புறக்கணித்தார். தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர் ராவுக்கும் மத்திய பாஜகவுக்கும் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.