வெயில் காலத்தில் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறதா? - தடுக்க இதோ டிப்ஸ்
பொதுவாக அனைத்து வயதினரிடத்திலும் காணப்படும் சரும பிரச்சனை முகத்தில் எண்ணெய் வழிவது. குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இதனை சற்று அதிகமாகவே எதிர்கொள்வார்கள். ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின் போதும், முகப்பரு அதிகரிப்பு, தோல் துளைகள் அடைபடுவதால் கரும்புள்ளிகள் மற்றும் உங்கள் முகத்தில் க்ரீஸ் பூசுவதால் சருமம் இத்தகைய பிரச்சனையை சந்திக்கிறது.
சருமத்தில் எண்ணெய் பசையை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக உங்கள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க செபாசியஸ் சுரப்பிகள் எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றன.
அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகும்போது சருமத்தில் எண்ணெய் பசையாகத் தோன்றி முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் உடலில் ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக இருப்பதால் சருமத் துளைகள் வழியாக அதிக எண்ணெய் வெளியேற்றப்படுகிறது. முதலில் உங்கள் சருமத்தில் சீரற்ற கெமிக்கல் தயாரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படியான எண்ணெய் சருமத்தை சில வழிகள் மூலம் நாம் தவிர்க்கலாம்.
- உங்கள் முகத்தை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமாக கழுவ வேண்டும். இதன்மூலம் சருமத்தில் தேங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் தேங்கியிருக்கும் துளைகள், முகப்பரு போன்ற பிரச்சனைகள் குறையும்.
- உங்கள் சருமம் நீரிழப்புடன் இருப்பதாக உணர்ந்தால் ஸ்கின்கேரில் உள்ள ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தலாம். அதேபோல் பிரகாசமான மற்றும் வயதான தோற்றத்தை தவிர்க்க எனிஜிங் எதிர்ப்பு பண்புகள் கொண்ட சீரத்தை பயன்படுத்தலாம்.
- வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எக்ஸ்போலியேட் செய்வதால் தோல் அடுக்கில் உற்பத்தியாகும் அதிகப்படியான சருமம், மேற்பரப்பில் உள்ள இறந்த சரும செல்கள் அகற்றப்பட்டு முகப்பரு, வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- சருமத்திற்கு ஈரப்பதம் தேவைப்படும் போது செபாசியஸ் சுரப்பிகளை ஈடுகட்ட அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. எனவே நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை உங்கள் சருமத்தில் தவறாமல் தடவ வேண்டும்.
- மேக்கப் செய்யும் போது ப்ரைமரைப் பயன்படுத்துவது சருமத்தில் எண்ணெய் பசையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறையாவது பேஸ் மாஸ்க் அல்லது பேஷியல் போன்றவற்றை முயற்சிக்கலாம்.
- பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது வெயிலால் சருமம் எண்ணெய் பசையாவதை தடுக்க உதவுகிறது.
- மேக்கப்பை அகற்றாமல் தூங்கினால் சருமத்தின் துளைகளை அடைத்து உங்கள் மற்ற சரும பிரச்சனைகளை அதிகரிக்கும்.