புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு- கடற்கரையில் நூதன முறையில் பிரச்சாரம் செய்த மக்கள்
உலக அளவில் தோல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா உள்ளது.
தோல்புற்று நோய்
ஆகவே காலை வேளையில் சூரியகதிர்கள் உடல் மீது படும் போது மனைதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
நிர்வாண போட்டோ சூட்
இந்த நிலையில் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில்இதனை படம் பிடித்தார்.