மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் எஸ்கே-21 - அந்த ராணுவ வீரரின் பயோபிக்கா..?
எஸ்.கே.21 திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
எஸ்.கே.21
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத எஸ்.கே.21 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்று மாலை எஸ்.கே.21 படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்று வெளிவரவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
A Journey of Sweat & Triumph unravels at 5pm Today!#HeartsonFire#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky… pic.twitter.com/747WDNasM3
— Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024
A Journey of Sweat & Triumph unravels at 5pm Today!#HeartsonFire#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky… pic.twitter.com/747WDNasM3
— Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024முகுந்த் வரதராஜன்
இந்நிலையில் எஸ்.கே.21 படத்தை குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படம் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம்.
மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள சோப்பியான் மாவட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டு 3 தீவிரவாதிகளை கொன்று வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் எஸ்.கே.21 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல், எஸ்.கே.21 முற்றிலுமாக மாறுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.