உங்கள யாருன்னே தெரியாது..பிரபல கிரிக்கெட் வீரரிடம் ஓப்பனாக சொன்ன எஸ்ஜே சூர்யா!
கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் நிகழ்ந்த ஒரு நகைச்சுவையான நிகழ்வைப் பற்றி பேசியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.
எஸ் ஜே சூர்யா
எஸ்ஜே சூர்யா தமிழ்த் திரை உலகில் இயக்குநராக அறிமுகமானார். இவரின் முதல் படமான "வாலி" அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். பின்னர் இவரே எழுதி இயக்கிய நியூ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக இசை என்ற படத்தை இயக்கினார்.

அதற்குப் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் பொம்மை என்ற படம் வெளியானது. சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கிரிக்கெட் குறித்த கேள்வியை கேட்டிருப்பார்.
அப்போது எனக்கு அவ்வளவு கிரிக்கெட் குறித்து தெரியாது என்று கூறி இவருக்கு கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் நிகழ்ந்த ஒரு நகைச்சுவையான நிகழ்வைப் பற்றி பேசியிருப்பார்.
நடராஜனுடன் சந்திப்பு
ஒருமுறை ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஒருவர் குழந்தையுடன் வந்து என்னிடம் ஹலோ சார் என்று சொன்னார். அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. அப்போது நான் குழந்தையை கொஞ்சினேன். அவர் என்னுடன் ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னார்.

நானும் அவர் மற்றும் அவரின் குழந்தையுடன் போட்டோ எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது என்னுடைய உதவியாளர்கள், சார் நாங்களும் ஒரு போட்டோ எடுத்துக்குறோம் என்று கூறினார்கள்.
நமக்குள்ள எதுக்குடா போட்டோ என்று கேட்டேன். அதற்கு உதவியாளர்கள் "உங்களோட இல்ல சார்..அவரோட ஒரு போட்டோ எடுத்துக்குறோம் என்று கூறினார்கள். அப்போது அதிர்ச்சியடைந்து ஆமா யாரு அவரு? என்று கேட்டேன்.
அப்போதுதான் அவர் ஒரு கிரிக்கெட் பிளேயர், அவர் பெயர் நடராஜன் என்று சொன்னார்கள். உடனே நான் நடராஜனிடம் சாரி...சார் எனக்கு தெரியாது என்று மன்னிப்பு கூறினேன் என்று சிரித்துக் கொண்டே எஸ்.ஜே. சூர்யா பேட்டியளித்துள்ளார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil