சினிமாவை விட்டு வெளியேற்றப்படும் எஸ்.ஜே.சூர்யா - அதிர்ச்சி தகவல்
எஸ்.ஜே.சூர்யாவிற்கு தற்போதைக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா கடந்த 2015ம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். பின்னர், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா 2’ ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து, அவர் ‘கில்லர்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகிறார். இதைத் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில், எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெட் கார்ட்
பல வருடங்களுக்கு முன் ஞானவேல் ராஜா ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் சம்பளத்தையும் வாங்கியிருக்கிறாராம். அப்பவே அட்வான்ஸ் தொகையை திருப்பி தர முன் வந்தாராம் எஸ் ஜே சூர்யா.
தற்போது, அட்வான்ஸ் தொகை தருகிறேன் என்று எஸ் ஜே சூர்யா கூற, இல்லை அட்வான்ஸ் தொகையோடு வட்டியையும் சேர்த்து கேட்டிருக்கிறாராம் ஞானவேல் ராஜா.
இதனால் வாக்குவாதமாகி தற்போதைக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.