நியூ என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா! எப்படி தெரியுமா?
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா புதிய வெப் சீரிஸின் மூலமாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எஸ்ஜே சூர்யா தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஒருவர். இயக்கம், எழுத்து, நடிப்பு, இசை என எல்லாத் துறைகளிலும் சாதனை புரிந்தவர்.

‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.
பின்னர் பல படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து கொண்டார். அதையடுத்து நடிகராக உருமாறி பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இந்நிலையில் புதிய வெப்சீரிஸின் மூலமாக ஓடிடியில் நியூ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெப்சீரிஸை 'கொலைகாரன்' படத்தின் இயக்குனர் ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளதாகவும், மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
