ஈழத்தமிழர்களின் வலிகளை உணர்த்தும் - 'ஆறாம் நிலம்' திரைப்படம்

Tamil Movie Sixth Land The Sixth Land
By Thahir Sep 29, 2021 09:50 AM GMT
Report

உலக தமிழர்களின் உறவுப்பாலமான ஐபிசி தமிழ் உலகில் வாழும் அனைத்து தமிழர்களையும் தமிழ் எனும் ஓற்றைப்புள்ளியில் இணைக்கிறோம்.

தமிழர்களின் உண்மைக்குரலாகவும் உரிமைக்குரலாகவும் ஒலிக்கும் ஐபிசி தமிழ் ஈழத்தமிழர்களின் மாறாத வடுக்களையும் இன்றும் ஆறாமல் இருக்கும் காயங்களையும்,

அவர்கள் அனுபவிக்கும் சில கசப்பான சம்பவங்களையும் போருக்கு பின்பும் கூட மாறாத அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆறாம் நிலம் எனும் திரைப்படம் மூலம் உங்களுக்கு காட்சிப்படுத்துகிறோம்.

போரின் கோர நிகழ்வுகளையும்,மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நிகழ்வுகளையும் மேலும் ஈழத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை அற்புதமாக காட்சி படுத்தியுள்ளது உங்கள் ஐபிசி தமிழ்.

இந்த திரைப்படத்தை முழுமையாக பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள் உங்கள் ஆதரவே எங்கள் வெற்றி மேலும் உங்கள் கருத்துக்களை எங்கள் ஐபிசி தமிழ் யூடியூப் பக்கத்தில்காமெண்ட் செய்யுங்கள்.